இலங்கையில் மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டி ஏற்படும்!

#SriLanka #Ranil wickremesinghe #Fuel
Mayoorikka
1 year ago
இலங்கையில் மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டி ஏற்படும்!

ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

 கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் ஆரம்பமாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும். அதன் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர், செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் இடம்பெறும்.

 என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என சில குழுக்கள் தெரிவித்து வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளின் தேவைக்காகவே இவ்வாறு பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 நாட்டில் அடுத்து இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடிப் பரந்துபட்ட கூட்டணியை அமைக்க இருக்கிறோம். 

 அதில் ரணில் விக்ரமசிங்க தேசிய தலைவராக தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய தலைவருக்கு மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருளுக்காக மக்கள் மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும். அந்த பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!