பொதுத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தல்!
#SriLanka
#Mahinda Rajapaksa
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் கருத்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இறுதியில் கட்சியின் இறுதிக் கருத்துக்கே அனைவரும் மதிப்பளிப்பார்கள் என்றார்.
அடுத்த சில வாரங்களுக்குள் முதலில் எந்தத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து அரசாங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடி நாட்டுக்கு அறிவிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.