பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வைத்தியசாலையில் அனுமதி
                                                        #Actor
                                                        #Hospital
                                                        #Surgery
                                                        #Heart
                                                        #Bollywood
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சனும், மருமகள் ஐஷ்வர்யா ராயும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.
81 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது