அநீதிக்கு எதிராக நாளை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு!

#SriLanka #Protest
Mayoorikka
1 year ago
அநீதிக்கு எதிராக நாளை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு!

அநீதிக்கு எதிராக நாளையதினம் காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார்.

 கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள்மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக்கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

 நாளைசனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்கள், சமயம்சார்ந்த அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள், சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், என அனைவரையும், கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!