கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் நேற்று (12.03)  உயிரிழந்துள்ளார்.

பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.  

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்களில் மீது ரிப்பர் வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், ரிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!