பொத்துவில் பகுதியில் பெண் ஒருவர் படுகொலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பொத்துவில் பகுதியில் பெண் ஒருவர் படுகொலை!

பொத்துவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவர் நேற்று (12.03) படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவராவார். உயிரிழந்த பெண் நபர் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளார்.  

குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்தத்துடன் சடலமாக காணப்பட்டதையும் சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.  

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!