இந்த ஆண்டு பிரேசிலில் டெங்கு காய்ச்சலால் 391 பேர் பலி

#Death #Brazil #Dengue #2024 #Patients
Prasu
2 years ago
இந்த ஆண்டு பிரேசிலில் டெங்கு காய்ச்சலால் 391 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். 

இருப்பினும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இந்த ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மேலும் 854 இறப்புகள் விசாரணையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4