சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
#SriLanka
#Protest
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு விளைவிக்கும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி இன்று (12.03) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.



