நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் நால்வர் பலி!

#SriLanka #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில்  நால்வர் பலி!

பிடிகல மற்றும் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளனர்.  

பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்று (11.03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், T-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

காயமடைந்தவர்களில் ஒருவர் எல்பிட்டிய வைத்தியசாலையிலும் மேலும் இருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் கடையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையில் தேரோணம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 

அத்தனகல்ல யதவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை கண்டுபிடிக்கச் சென்ற போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அங்கு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!