43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது - நிஹால் தல்துவ!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (10.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், குற்றக் கும்பல்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட உள்ளன.
துபாயில் கைது செய்யப்பட்டுள்ள கிரிமினல் கும்பலைச் சேர்ந்த "மன்னா ரமேஷ்" தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து துபாய் அரசுடன் ஆலோசிப்பதாக நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.