பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலி

#Death #government #Pakistan #BombBlast #vehicle
Prasu
2 years ago
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது, கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa) பிராந்தியம்.

இதன் தலைநகரம், பெஷாவர் (Peshawar). கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இன்று காலை, இந்நகரில் போர்ட் பஜார் (Board Bazaar) பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர் அங்குள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் (Lady Reading Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 வெடித்த குண்டுகள், 4லிருந்து 5 கிலோகிராம் வரை எடை கொண்டவை என்றும் நடைபெற்றது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4