பெண்களில் முதலீடு செய்யுங்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்: மகளிர் தின வரலாறு

#SriLanka #Women #world_news #Womens_Day
Mayoorikka
4 months ago
பெண்களில் முதலீடு செய்யுங்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்: மகளிர் தின வரலாறு

உலகமெங்கும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையை நினைவுகூரும் நாளாகும். 

அதே வேளையில் கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பல்வேறு துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. மக­ளிர் உரி­மை­க­ளைக் கோர­வும் அவர்­க­ளின் சாத­னை­க­ளைப் பாராட்­ட­வும் ஒரு வாய்ப்­பாக இந்நாள் உள்ளது.

 1900களின் தொடக்­கத்­தில் அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­யபிய நாடு­க­ளி­லும் பெண்­ணு­ரிமை குறித்த பெரும் நடைபெற்ற விவா­தங்கள் மக­ளிர் தினக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு வேராக அமைந்­தன. 

 2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'பெண்களில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்பதாகும். Inspire Inclusion மற்றொரு கருப்பொருளாகும். 

அதாவது சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. 1908ல் நியூ­யார்க் நக­ரில் 15,000 பெண்­கள் வாக்­கு­ரி­மை­யை­யும் இன்­னும் மேம்­பட்ட வேலைச் சூழ­லையும் கோரி­ வீதி­களில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

 அந்த எழுச்­சி­யின் நினை­வாக 1909ல் அமெ­ரிக்­கா­வில் முதன்­ மு­றை­யாக தேசிய மக­ளிர் தினம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது. 1910ல் டென்­மார்க்­கின் கோபன்­ஹே­கன் நக­ரில் நடை­பெற்ற அனைத்­து­லக பணி­­பு­ரி­யும் மக­ளி­ருக்­கான மாநாட்­டில், அனைத்­து­லக மக­ளிர் தினம் கொண்­டா­டப்­பட வேண்­டும் என்று கிளாரா ஸேட்­கின் யோசனை தந்­தார். அதை சில நாடு­கள் ஏற்­றுக்­கொண்­டன. 

ஆனால் மக­ளிர் தினத்­துக்­கென்று குறிப்­பிட்ட தேதியை அறி­விக்­கா­மல், ஒவ்­வொரு நாடும், ஒவ்­வொரு தேதி­யில் கொண்­டா­டின. 1911ல் ஆஸ்­தி­ரியா, டென்­மார்க், ஜெர்­மனி, சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­களில் பெண்­ணு­ரி­மைக்கு ஆத­ர­வாக ஒரு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்­டோர் திரண்­ட­னர்.

 ரஷ்­யா­வில் உழைப்­பாளி களின் சார்­பில் ஆர்ப்­பாட்­டங்­கள் திட்ட­மி­டப்­பட்ட நிலை­யில் அந்­நாட்­டுப் பெண்­கள் முன்­கூட்­டியே ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கி­னர். அந்­நா­ளான மார்ச் 8அம் தேதி பின்­னர் அனைத்­து­லக மக­ளிர் தின­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. பெண்களின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 

பாலினச் சார்பு மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.

 சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமத்துவமின்மை, பாலின அடிப்படையிலான வன்முறை, கல்வி மற்றும் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் தினம் சிறந்த அடித்தளமாகும். 

பாலின சமத்துவத்தை ஊக்குவித்து, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளை நோக்கிச் செயல்படுவதற்கும், ஏற்படுத்த வேண்டியை முன்னேற்ற பாதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும் இது சரியான தருணமாகும்.