இலங்கை பொருளாதாரம் மீண்டு வருகிறது : ஐ.எம்.எஃப் பிரதிநிதி மகிழ்ச்சி!
#SriLanka
#IMF
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07.03) நிதியமைச்சில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.