15 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது நபர் கைது

#SriLanka #School #Arrest #Student #Sexual Abuse #Badulla
Prasu
1 year ago
15 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது நபர் கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அதேநேரம் சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!