மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் திருவுடல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் திருவுடல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அவருடை திருவுடல் இன்று (03.03) மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

இதன்படி  இன்று காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். இதனைத்  தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது. 

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியிலும், இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

 மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!