பொரளை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் சேடவத்த பிரதேசத்தில் வைத்து கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று (03.02) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதி மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 22 வயதுடையவர்.