இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமேற்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-35 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.