புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கூடிய மக்களால் பதற்றம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கூடிய மக்களால் பதற்றம்!

புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒன்றுத்திரண்ட மக்கள் புகையிரத்தத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

புகையிரதத்தை மறித்த கிராம மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த இடத்தில் தற்போது கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  

ஹலவத்தையில் இருந்து புத்தளம் நோக்கி இன்று பிற்பகல் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மோதி உயிரிழந்துள்ளார். 

பின்னர் புத்தளத்தில் இருந்து ஹலவத்தை நோக்கி புகையிரதம் சென்று கொண்டிருந்த போது புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தை மறித்து கிராம மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!