சாந்தனின் பூதவுடலுக்கு சீமான் ,வைகோ நளினி உள்ளிட்டோர் அஞ்சலி- உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள்

#India #SriLanka #Death #Tamil Nadu
Mayoorikka
1 year ago
சாந்தனின் பூதவுடலுக்கு சீமான் ,வைகோ நளினி உள்ளிட்டோர் அஞ்சலி- உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள்

சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சாந்தனின் பூதவுடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

images/content-image/2023/02/1709118675.jpg

 மேலும் தமது நண்பன் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன், நளினி ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/2023/02/1709118690.jpg

 உயிரிழந்த சாந்தன் இறுதியாக எழுதிய கடிதம் என்ற வகையில் அவருடைய கையெழுத்துடன் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சாந்தன் தனது சகோதரனுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

images/content-image/2023/02/1709118714.jpg

 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனை அவரது சகோதரர் மதிசுதா கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது எடுத்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

images/content-image/2023/02/1709118733.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!