பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

#SriLanka #prices #Food
Mayoorikka
1 year ago
பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்  தகவல்!

அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக உள்ளூர் சந்தையில் கேக் பாண் மற்றும் பன்களின் விற்பனை சுமார் 50% ஆல் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

 மாஜரின் மற்றும் வெண்ணெய் விலை ரூ.1000 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோகிராமின் விலை முறையே 3,000 ஆகவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 "இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் எங்களுக்கு வரவில்லை, மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை தலா 60 ரூபாய்க்கு வாங்க வேண்டும். 

இது பேக்கரி தொழிலுக்கு கடுமையான அடியாகும்" என்று சங்கத் தலைவர் கூறினார். எனவே எதிர்வரும் சிங்கள, இந்து புத்தாண்டுக்கு முன்னர் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான பொருட்களின் விலைகளை குறைத்து சலுகைகளை வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!