மாலியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே 31 பேர் பலி!

#Accident #world_news #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மாலியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே 31 பேர் பலி!

மாலியில் பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு ஆபிரிக்காவின் துணைப் பிராந்தியத்தில் இருந்து மாலியர்கள் மற்றும் நாட்டினரை ஏற்றிச் சென்ற பேருந்து, புர்கினா பாசோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை தீவிரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!