அரசியல் கட்சிகளை சந்திக்கவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!
#SriLanka
#Election
#Meeting
#Election Commission
#srilankan politics
Mayoorikka
1 year ago

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (27) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்தவே இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இச்சந்திப்பில் அரசியல்வாதிகளுக்கு உரிய சட்ட விதிகள் குறித்து உரிய புரிதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



