ஆண்போல் பேசி காதல் உறவை வளர்த்த யுவதியால் பாடசாலை மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஆண்போல் பேசி காதல் உறவை வளர்த்த யுவதியால் பாடசாலை மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் ஆண் போன்று நடித்து பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளிகளை பகிர்ந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 இந்த குற்றச்சாட்டின் கீழ் அனுராதபுரம் கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்ட நிலையில் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டபோதே யுவதி ஒருவர் இளைஞனாக வேடமணிந்து காதலித்தது மாணவிக்கு தெரியவந்துள்ளது. 

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவியுடன் காதல் உறவை வளர்த்துக்கொண்டுள்ளார்.  

19 வயது யுவதி 15 வயது மாணவியிடம் தன்னை ஆண் என அறிமுகம் செய்துள்ளார். தொலைபேசியில் ஆண் ஒருவரின் குரலில் அழைத்து இந்த உறவைப் பேணி வந்துள்ளார். இந்த உறவு சுமார் ஒரு வருடமாக தொடர்ந்துள்ளது. 

மேலும் 15 வயது மாணவி தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் தனது காதலனாக நடித்த யுவதிக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவியை தனது தந்தையை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். 

ஆனால், மாணவி மறுத்துள்ளார். தன்னை பார்க்க வராவிட்டால், முன்பு அனுப்பிய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார். ஆனால், மாணவி தொடர்ந்து தன்னை சந்திக்க மறுத்ததால் மாணவியின் புகைப்படங்களை 19 வயது யுவதி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!