சம்பளம் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு மத்திய வங்கி விளக்கம்!

#SriLanka #Bank of Ceylon #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சம்பளம் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு மத்திய வங்கி விளக்கம்!

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  

எழுத்துமூலம் அவகாசம் கோருமாறு ஆளுநர் சபையினால் விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த 22ஆம் திகதி நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான உண்மைகளை விளக்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தின் பின்னர் உரிய பாராளுமன்றக் குழுவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!