எட்கா ஒப்பந்தத்தால் இலங்கைக்கு எந்த பாதகமும் ஏற்படாது : அலி சப்ரி!

#SriLanka #Ali Sabri #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
எட்கா ஒப்பந்தத்தால் இலங்கைக்கு எந்த பாதகமும் ஏற்படாது : அலி சப்ரி!

இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாது என வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உலக சந்தை தொடர்பான வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது எனவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.