மின் கட்டணம் தொடர்பில் ஆராய கூடுகிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை கடந்த 22ஆம் திகதி பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த திருத்தத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.