20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை!
#SriLanka
#land
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் பல பிரிவுகளின் கீழ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட முறையின் கீழ் பொறுப்புக் கூறக்கூடிய ஆவணத்துடன் உரிய காணியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"இது பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும் உங்கள் நிலத்தின் வாரிசாக நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். விரைவில் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.