எல்ல பகுதியில் சுற்றுலாவிற்கு சென்ற நபர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர் ஒருவருடன் நேற்றைய (22.02) தினம் எல்ல மலைத்தொடரில் ஏறிய நிலையில் அங்கிருந்து கீழ் இறங்கும்போது குன்றொன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பொரகொல்ல பேருவளை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையராவார்.
ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்த நபர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.