பாக்கு நீரிணையை கடந்து உலகில் 6 ஆவது இடத்தினை பெற வேண்டும்: திருகோணமலை சிறுவன் உறுதி

#India #SriLanka #Trincomalee #Swim
Mayoorikka
2 years ago
பாக்கு நீரிணையை கடந்து உலகில் 6 ஆவது இடத்தினை பெற வேண்டும்: திருகோணமலை சிறுவன் உறுதி

நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து உலகில் 06 ஆவது இடத்தினை பெறவேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என ஹரிகரன் தன்வந்த் தெரிவித்தார்.

 எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இந்திய தனுஷ்கோடியில் இருந்து அதிகாலை 12.05 க்கு நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் டியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

 ஹரிகரன் தன்வந்த் அவர்களது ஊடக சந்திப்பு நேற்று(21) யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நீச்சலில் பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வதற்கான விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் காணப்படுகின்றது கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக்கழிவுப் பொருட்களை அகற்றி, கடற்பரப்பின் சுத்தமாக வைத்துயிருப்பது விழிப்புணர்வினை ஏற்படுத்தல், உயிர்வாழ் உயிரினங்களில் கடல்வாழ் ஆமைகளை பாதுகாத்தல், முருங்கற் பாறைகளின் முக்கியத்துவத்தின் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் இந்த நீச்சலில் ஈடுபடவுள்ளேன்.

 ஈ.சி.டி.திருகோணமலை இந்துக் கல்லூரியில் நான் எட்டாம் தரத்தில் கல்வியினை கற்று வருகின்றேன். கடந்த நான்கு வருடங்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவருகின்றேன் என்றார்.

 மேலும் இது தொடர்பாக கருத்துக்களை வழங்கிய தன்வந்த்தின் தந்தையாகிய ராஜகோன் ஹரிகரன், எனது மகன், மாகாண மட்டத்தில் நடாத்திய நீச்சல் போட்டில் முதல் இடங்களை பிடித்து விருதுகளை பெற்றுள்ளார். 

தேசிய ரீதியாக நீச்சல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். எனது மகன் உலக சாதனையினை முறியடிக்க இந்த முயற்சி எடுத்துள்ளார். 31.05 கிலோ மீற்றர் கொண்ட கடற்பரப்பில் நீச்சல் சாதனை புரிய உள்ளார். கடந்த வாரங்களில் கொழும்பு கோட்சிற்றியில் இருந்து கல்கிசை கோட்சிற்றிவரை நீச்சல் பயிற்சிகளை பெற்று இருக்கின்றார்.

 மேலும் திருகோணமலை கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் தூரம் வரையான கடற்பரப்பில் நீச்சல் பயிற்சிகள் பெற்றுள்ளார். கடந்த கிழமை இலங்கை - இந்திய ஆகிய கடற்படையினரின் எல்லைக்கோடு வரை சென்று நீச்சல் பயிற்சியினை பெற்றுள்ளார். இந்த நீச்சலில் வெற்றி பெற்றால் உலகத்தில் பாக்குநீரிணையை கடந்த 13 வயது சிறுவனாகவும் காணப்படுவார். 

இதற்கு எடுக்கும் காலம் 09 மணித்தியாலங்களும் 54 நிமிடமாகவும் காணப்படுகின்றது. உலகத்தில் 50 பில்லியன் மக்களிடையே பாக்கு நீரினை கடந்த நீச்சலினை 06 ஆவது நிலையினை பெறவேண்டும் என்பதுதான் இலக்கு என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4