வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

#SriLanka #Vavuniya #Court Order #Prison #Sexual Abuse #Lanka4 #Case #L4
Prasu
2 hours ago
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

வவுனியாவில் 14 வயதுடைய தனது சொந்த மகளைத் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

சம்பவம்: 

  • 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கை:

  • 2022 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தந்தைக்கு எதிரான 4 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

தண்டனை விபரம்:

  • 4 குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு & அபராதம்: 

  • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும், நீதிமன்றத்திற்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

"பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுகிறது."

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4