வேகமாக பரவும் ஆபத்தான நோயொன்றைக் கட்டுப்படுத்த இலங்கை வரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட குழு!

#SriLanka #Health #doctor #World_Health_Organization
Mayoorikka
1 year ago
வேகமாக பரவும் ஆபத்தான நோயொன்றைக் கட்டுப்படுத்த இலங்கை வரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட குழு!

தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான வரைப்படத்தை உருவாக்க இந்த குழு சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் என தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 நாட்டில் தொழுநோயாளிகளின் அதிகரித்துள்ளதாக தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். 

இந்த முயற்சிக்கு உதவுவதற்காக விசேட வைத்திய குழுவை மார்ச் மாதம் இங்கு அனுப்புவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எங்களுக்குத் அறிவித்துள்ளது. 

அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தொழுநோயை முற்றாக தடுக்க ஒரு வரைபடத்தை உருவாக்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!