நடிகர் பிரபு தேவாவுடன் பேட்ட ராப் படத்தில் நடனமானடிய வேதிகா பதற்றம்
                                                        #Cinema
                                                        #Actor
                                                        #Actress
                                                        #TamilCinema
                                                        #dance
                                                    
                                            
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        1 year ago
                                    
                                எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், ‘பேட்ட ராப்’. இதில் வேதிகா நாயகியாக நடிக்கிறார்.
ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
ப்ளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இதன் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், சன்னி லியோன் இந்தப் படத்துக்காக பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் பிரபுதேவாவின் தீவிர ரசிகை. வேகமான நடன அசைவுகளுக்கு அவர் பெயர் பெற்றவர். அவருடன் ‘பேட்ட ராப்’ படத்துக்காக ஆடினேன். அவருடன் ஆடும்போது கொஞ்சம் பதற்றமடைந்தேன். பிறகு சமாளித்து ஆடினேன்.” என்று தெரிவித்துள்ளார்.