போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது - நெதன்யாகு

#PrimeMinister #Israel #War #Hamas #Gaza #Netanyahu #ceasefire
Prasu
2 years ago
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது - நெதன்யாகு

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் நடத்தி வரும் போர், 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.

இடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் வசம் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்கவும், மீண்டும் போர்நிறுத்தத்தை கொண்டு வரவும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஹமாஸ் அமைப்பினர் நிரந்தர போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருடன் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கருத்து தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை.

அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. மேற்கொண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது. பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது.

பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் தொடர்ந்து israasfகடுமையாக எதிர்க்கும். முன்நிபந்தனைகள் இல்லாமல் இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு பயனுள்ள ஏற்பாட்டை செய்ய முடியும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4