தமிழரசுக் கட்சிக்குள் சகுனிகள் யார்?

#SriLanka #Article #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
தமிழரசுக்  கட்சிக்குள் சகுனிகள் யார்?

தமிழரசுக்கட்சிக்கு எதிராக வழக்குதாக்கல் செய்த முல்லைத்தீவு பீற்றர் இளம்செழியன், திருகோணமலை பரா சந்திரசேகரம் இருவரையும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையண்டுள்ளனர் என்பது 100 வீதம் உண்மை. 

அதாவது சுமந்திரன் சாணக்கியன் இருவருடைய வழிகாட்டல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது! இது முன்பள்ளி 3, வயது குழந்தை தொடக்கம் முதியோர் இல்லத்தில் உள்ள 96,வயது தாத்தா பாட்டிக்கும் தெரியும்.  

இவர்கள் உண்மையிலேயே யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் பிறந்த தமிழர்கள் என்றால் இவ்வாறான ஒரு துரோகம் செய்திருக்க வாய்ப்பில்லை. தனது பெற்ற தாயை சிறையில் அடைப்பதை போன்ற செயலே இது… கொழும்பில் வெள்ளவத்தையும், கொழும்பு நீதிமன்றங்களிலும், மெதடிஷ்த்த திருச்சபையுடனும் முடங்கிக்கிடந்த சுமந்திரனை 2010, ல் அரசியலுக்கு அழைத்துவந்து முகவரி கொடுத்த கட்சி தமிழரசுக்கட்சிதான்.  

அந்த தவறை செய்தவர் பெரும் தலைவர் என இப்போது கூறுப்படும் சம்பந்தர். (புலிகள் இல்லாத காலம் நரி உள்வந்தது) அதுபோல் கண்டியில் பிறந்து அவுஷ்ரேலியாவில் வாழ்ந்து தனது பாட்டனார் இராசமாணிக்கத்தாரின் மரியாதையை 2012,ல் இனப்படுகொலையாளி மகிந்த Company க்கு ஈடு வைத்துவிட்டு 2015, ல் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் எலும்புத்துண்டை பெற்று பிள்ளையான்,ஹிஷ்புல்லாவுடன் இணைந்து Election கேட்டு 1568, வாக்குகளை பெற்று மட்டக்களப்பு மக்களால்,  நிராகரிக்கப்பட்ட சிங்களத்தாயின் புத்தா சாணக்கியனை 2020, தேர்தலில் தமிழ்சுக்கட்சிக்கு அப்போது பொதுச்செயலாளராக இருந்த துரைராசசிங்கம், சுமந்திரன், மாவை, சம்பந்தன் ஆகியோருக்கு கையூட்டல் கொடுத்து உள்வாங்கி MPஆக ஆக்கிய தமிழ்சுக்கட்சிக்கு இன்று அதே சாணக்கியன் நன்றி மறந்து துரோகம் செய்துவிட்டார்.  

இந்த இருவரும் வடக்கு கிழக்கில் பிறக்காதவர்கள்,வாழாதவர்கள், 74, வருட தமிழரசுக்கட்சி வரலாற்றில் இதுவரை எந்த முரண்பாடுகள், எதிர்புகள் வந்தாலும் நீதிமன்றத்தை எவருமே நாடவில்லை. அதற்கான மூலகாரணம் தமிழரசுகட்சிக்குள் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் வடகிழக்கில் பிறந்து வளர்ந்து தமிழ்தேசியத்தை அந்த மண்ணில் இருந்து அனுபவரீதியாக உணர்ந்தவர்கள் அந்த தமிழ் மண்ணின் காற்றை சுவாசித்தவர்கள். 

ஆதலால் அவர்கள் எவரும் தமிழரசுக்கட்சியை ஶ்ரீலங்கா நீதிமன்றில் அடவுவைக்கவில்லை! இப்போது நடந்தது கொழும்பிலும், கண்டியிலும் பிறந்து வாழ்ந்து சிங்கள தேசியத்துக்குள் இரண்டறக்கலந்தவர்கள், சிங்கள மண்ணின் காற்றை சுவாசித்து ( விவாகம் சிங்கள மணமக்கள், தாய் காதலி சிங்கள சம்பந்தி) வாழ்ந்த வழிப்போக்கர்கள் இந்த இருவரும். 

“குலத்தளவே ஆகுமாம் குணம்”என்பது இதுதான் நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டியது ! சிங்களத்தேசியம் 80, வீதமும், தமிழ்தேசியம் 20, வீதமும் உள்ளவர்களை தமிழரசுகட்சியில் இணைத்தால் இதுவும் நடக்கும்! எதுவும் நடக்கும்!! இன்னும் நடக்கும்!!!