இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று (18.02) மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.