தண்ணீர் இறைக்க சென்றவருக்கு கிணற்றுக்குள் காத்திருந்த அதிர்ச்சி!

#SriLanka #Death #water #baby
Mayoorikka
1 year ago
தண்ணீர் இறைக்க சென்றவருக்கு கிணற்றுக்குள் காத்திருந்த அதிர்ச்சி!

ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 வீட்டில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் மோட்டாரை போடும் முன் கிணற்றை சோதித்த வீட்டின் உரிமையாளர், கிணற்று தண்ணீரில் பொம்மை ஒன்று மிதப்பதைக் கண்டு அதை அகற்ற முற்பட்ட போது, பொம்மை இல்லை என்பதை உணர்ந்தார். பின்னர் அது ஒரு சிசுவின் சடலம் என தெரியவந்தது.

 பின்னர், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன், குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு நீதவானின் உத்தரவின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!