நுவரெலியா நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

#SriLanka #NuwaraEliya #Tamilnews #sri lanka tamil news #Driver
Thamilini
1 year ago
நுவரெலியா நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியா பிரதேசத்தில் பெய்து வரும் சிறு மழையினால் அப்பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. 

இந்நிலையில் நுவரெலியா நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு நுவரெலியா பிரதான காரியாலய பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட ஹவாஎலியா பொரலந்த உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓய, தலவாக்கலை, ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதெல்ல குறுகிய வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

வாகனங்களைச் செலுத்தும் போது மிகக் குறைந்த வேகத்துடனும் கவனத்துடனும் செயற்படுமாறும், வாகனத்தில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!