காதல் என்பது உன்னதமான ஓர் உணர்வு! காதலர் தினம் என்றால் என்ன? அது எப்படி உருவானது?

#SriLanka #Lifestyle #Love
Mayoorikka
5 months ago
காதல் என்பது உன்னதமான ஓர் உணர்வு! காதலர் தினம் என்றால் என்ன? அது எப்படி உருவானது?

உலகமே அன்பு மயம்! அனைத்து மதமும் அன்பையே அடிப்படையாக வைத்து அன்பே ஆற்றலாகிய பேராற்றல் கடவுளாக வணங்குகிறார்கள்.

 ஆம் அந்த அன்பை அடிப்படையாக கொண்டு அறிவுரைகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள். ஆம் அன்புக்கு மறு பெயர் காதல் அல்லவா. அக் காதலின் மொழியை சுவாசிக்க ஏன் கொண்டாட என்றும் கூறலாம். அக் காதலுக்கான தினத்தை பற்றி லங்கா4 ஊடகத்தில் அலசவுள்ளோம் வாருங்கள் அலசலாம்.

 காதல் என்பது தனித்துவமான, கவித்துவமான, உன்னதமான ஓர் உணர்வு! காதலர் தின வரலாறு உலகம் முழுவதும் அனைத்து ஜீவராசிகளும் கொண்டாடும் வார்த்தைகளில் ஒன்று தான் காதல். அப்பாவின் பாசம், அம்மாவின் பாசம், குழந்தைகள் மீதான பாசம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு விதமான பாசம் கலந்த காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து ஒரு நாளும் யோசித்து இல்லை.. இதோ காதல் தினத்தின் வரலாறு மற்றும் சிறப்பம்சம் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

 காதலர் தினத்தின் தோற்றத்திற்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. 

ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவே தான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளார். இந்த சூழலில் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்த வைத்துள்ளார். 

இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வந்த போது பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. இது பொதுவான விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மிகவும் பிரபலமான புராணக்கதைகளில் ஒன்றின்படி காதலர் தினம் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் நடைபெற்ற ரோமானிய திருவிழாவான லூபர்காலியாவில் இருந்து வருகிறது. வசந்த காலத்தின் துவக்கத்தின் போது கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் பெண்கள் ஆண்களுடன் லாட்டரி மூலம் ஜோடியாக இணைக்கப்பட்டனர். போப் கெலாசியஸ் I இந்த பண்டிகையை புனித காதலர் தினமாக மாற்றியதாக நம்பப்படுகிறது. ரோமானிய புராணங்களின்படி வீனஸின் மகனான காதல் மற்றும் அழகின் தெய்வமாகப் பார்க்கப்பட்டான். மன்மதனின் வில் மற்றும் அம்பு இதயத்தைத் துளைத்து காதல் மந்திரத்தை வெளிப்படுத்துவதை சித்தரிக்கிறது. 

எனவே இந்த திருவிழா காதல் உணர்வைக் கொண்டாடுவதாகும். நவீன காலத்தில் காதலர் தினம் வணிகமயமான பண்டிகையாக மாறிவிட்டது. காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் ஆடம்பரமான பரிசுகளைக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். அப்போது கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். காதலர் தின கொண்டாட்டத்தில் இதயப்பூர்மான பரிசுகளை அளிப்பவர்களுக்கு மட்டுமே அது என்றென்றும் நிலைத்து நிற்கும். ஆடம்பரமாகச் செலவு செய்து பரிசு வழங்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. மேலும் படிங்க காதல் உறவில் அர்ப்பணிப்பை உணரத்தும் ப்ராமிஸ் டே காதல் உறவுக்காக கைவினை பொருட்களைத் தயாரிக்கலாம், பிடித்தமான உணவை நாமே சமைத்து கொடுக்கலாம், வாழ்த்து அட்டையில் கவிதைகள் எழுதி அன்பை வெளிப்படுத்தலாம். இப்படி ஏராளமான வழிகள் உள்ளன.

 காதலில் வெற்றி தோல்வி என்பது ஒரு மாய வார்த்தை. திருமணத்தில் முடிந்தால் மட்டுமே காதல் வெற்றி பெற்றதாக அர்த்தம் இல்லை. ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருந்தால் அது தான் உண்மையான காதல். இது தற்போது அரிதினும் அரிதாகி விட்டது. காதலர் தினம் உலகம் முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில், தம்பதிகள் பரிசுகள், சாக்லேட்டுகள் மற்றும் பூக்களை பரிமாறிக் கொள்கிறார்கள், மற்றவர்கள் காதல் கடிதங்களை எழுதுகிறார்கள் அல்லது தங்கள் அன்புக்குரியவர்களுடன் மனதிற்கு பிடித்த ஏதேனும் ஒரு இடத்திற்கு செல்கிறார்கள்.

 நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு சிறிய பரிசுகள் அல்லது பாராட்டு டோக்கன்களை வழங்குவதன் மூலம் மக்கள் தங்கள் அன்பையும் பாசத்தையும் காட்ட ஒரு வாய்ப்பாகவும் இந்த நாள் உள்ளது. காதலர் தினத்தில் பரிசு வழங்குவது என்று வரும்போது, அதற்காக எண்ணிலடங்கா பொருட்கள் உள்ளன. இருப்பினும், காதல் துணைக்கு பரிசாக எதை வாங்குவது அல்லது எதை வாங்கக் கூடாது என்பதில் பலருக்கு குழப்பம் உள்ளது. நீங்கள் பூக்கள், சாக்லேட்டுகள், நகைகள், தனிப்பட்ட பரிசுகள், பரிசுக் கூடைகள் வழங்கத் தேர்வுசெய்தாலும், உங்கள் உண்மையான பாசத்தையும் பாராட்டையும் காட்டுவதுதான் மிக முக்கியமான விஷயம். எனினும் சில பொருட்களை காதலர்களுக்கு பரிசாக கொடுப்பது காதலை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

 காதலர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டமல்ல, இது ஒரு வாரக் கொண்டாட்டமாக உள்ளது உலக நாடுகளில். அதாவது, இந்த கொண்டாட்டம் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நீள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாட்டம் என்பது 7 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. 

images/content-image/2023/02/1707882700.jpg

 பிப்ரவரி 7 - ரோஜாக்கள் தினம் : அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது என்கிறார்கள் காதலில் திளைத்தவர்கள். எனவே, காதலர் தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைக்கும் காதலர்கள், 

பிப்ரவரி 7ம் தேதி தனது இணையருக்கு இந்த நாளில் ரோஜா மலரைப் பரிசளிக்கிறார்கள்.

 பிப்ரவரி 8 - காதலைச் சொல்லும் தினம் :

 காதலைச் சொன்னவர்களும் சரி, சொல்லாதவர்களும் சரி இன்று உங்கள் இணையரிடம் நீங்கள் கொண்ட காதலை மிக அழகாக வெளிப்படுத்தலாம். 

 பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்: உங்கள் உறவில் ஒரு இனிமையை ஏற்படுத்தும் வகையில், இணையருக்கு சாக்லேட்டை பரிசளிக்கும் தினம் இது. இப்போதுதான் இதய வடிவில் சாக்லேட் பாக்ஸ் முதல் இதய வடிவ சாக்லேட்டுகளும் விற்பனைக்கு வருகின்றனவே.

 பிப்ரவரி 10 - டெட்டி டே : பெண்களுக்குப் பிடித்த பொம்மையாக கரடி பொம்மைகள் விளங்குகின்றன. அவற்றை பரிசளித்து மகிழலாம். 

 பிப்ரவரி 11 - வாக்குறுதி தினம் : இருவரும் காதலில் இணைந்து இணை பிரியாமல் வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் தினமாக இது அமைந்துள்ளது. 

 பிப்ரவரி 12 - முத்த தினம் : காதலின் அழகிய உணர்வை மிக மென்மையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த தினத்தை காதலர்கள் முத்தமிட்டு வெளிப்படுத்துகிறார்கள். 

 பிப்ரவரி 13 - அணைத்தல் தினம் : தங்களுக்குள் இருக்கும் எந்த வலியையும் எந்தக் கவலையையும் மறக்கச் செய்யும் ஆற்றல் அணைத்தலுக்கு உள்ளது. அதைத்தானே வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலும் கட்டிப்பிடி வைத்தியம் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கொண்டாடும் தினம் தான் இது. 

 பிப்ரவரி 14 - காதலர் தினம் : இன்றைய தினம் எல்லாவற்றுக்கும் மேலான காதலர் தினம். இதைத்தான் இன்று உலகமே மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. காதலிப்பவர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் கூட தற்போது காதலர் தினத்தை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்.

 இவ்வாறு காதலர் தினத்தில் உலகமே காதலால் நிரம்பியுள்ளது. இந்த மாசற்ற அன்பே மனிதத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. ஆதலால் காதல் செய்வீர்