மோதர பகுதியில் துப்பாக்கிச்சூடு : வர்த்தகர் ஒருவர் படுகாயம்!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மோதர பொலிஸ் பிரிவில் நேற்று (13.02) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 14, மஹவத்தை பதுமங்க பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
காரில் வந்த இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.