ஓஹோ எந்தன் பேபி படமானது பூஜையுடன் தொடங்கியது. நடிகர் விஷ்ணுவிஷாலின் தம்பி ருத்ராவே இதில் கீரோ
                                                        #Cinema
                                                        #Actor
                                                        #TamilCinema
                                                        #worship
                                                        #Movie
                                                        #Brother
                                                    
                                            
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        1 year ago
                                    
                                நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி, ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரிக்கிறது. விளம்பரப் பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார்.

இதில் இந்தி நடிகை மிதிலா பால்கர் நாயகியாக நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமான்ஸ் காமெடி படமான இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.
 இரண்டு வாரங்கள் தொடர்ந்து இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்கிறது. கோவா உட்பட பல இடங்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது