சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம் நாளையும் தொடரும்!
#SriLanka
#Health
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (14.02) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13.02) காலை 06.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் நாளை (14.02) கொழும்பில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்தார்.