இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மாற்று வழிகள் இருப்பின் பேச்சுவார்த்தைக்கு தயார் : பந்துல!
#SriLanka
#Bandula Gunawardana
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு அப்பால் வேறு மாற்று வழிகள் இருப்பின் எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார் என நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம், பொது நிதி முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவு இல்லாத குழுக்கள் மக்கள் முன்னிலையில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது வெறும் வார்த்தைகளால் முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.