யுக்திய நடவடிக்கை - 680 சந்தேக நபர்கள் கைது
#SriLanka
#Arrest
#Police
#island
#drugs
#search
Prasu
2 years ago
யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 680 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 126 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 168 கிராம் ஹெரோயின், 93 கிராம் ஐஸ், 925 கிராம் கஞ்சா மற்றும் 596 போதை மாத்திரைகள் சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் உள்ள 126 சந்தேக நபர்களில் 18 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 105 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.