மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிவிட்டதாகவும், தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
விமானம் மீண்டும் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான ஹோட்டல் தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.