குழந்தையை நுண்ணலை அடுப்பினுல் வைத்து கொன்ற தாய்

#Arrest #Murder #America #baby #Oven
Prasu
1 year ago
குழந்தையை நுண்ணலை அடுப்பினுல் வைத்து கொன்ற தாய்

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரை சேர்ந்தவர் மரிகா தாமஸ் (வயது 26). இவருக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மரிகா தாமஸ் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் ஆடை மற்றும் குழந்தையை சுற்றிவைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தால் கருகி எரிந்த புகை வாசனை வந்துள்ளது. 

எரிந்த புகை வாசனை வருவது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!