பல நாட்டு உளவுப் படைகளின் கூட்டில் நடந்த தமன்னாவின் ஆட்டம் ஈழத் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை அழிக்கவா?

#SriLanka #Jaffna #Music #cultural
Lanka4
1 year ago
பல நாட்டு உளவுப் படைகளின்  கூட்டில் நடந்த தமன்னாவின் ஆட்டம் ஈழத் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை அழிக்கவா?

யாழ்ப்பாணத்தில் ஹரிகரனுடைய இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் கவர்ச்சி நடனம் தான் ஆடப்பட்டுள்ளது. 

இந்த கவர்சி நடனத்திற்காக தற்பொழுது கவர்சி நடனத்தில் ரெண்டிங்கில் இருக்கும் கதாநாயகி சமீப காலத்தில் ராஜனியுடைய படத்தில் கவர்ச்சி நடனம் ஆடிய தமன்னாவை கொண்டுவந்தும், கலாச்சாரத்திற்கு பேர்போன யாழ்ப்பாணத்தில் கவர்சி ஆடை அணிந்து பலரை மேடையேற்றி நைற் கிளப்பாக யாழ்ப்பாணத்தினை மாற்றிய ரம்பாவினுடைய கணவர் இந்திரன் அவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் வன்மையான கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

 இந்திரன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் நுழைந்ததே கல்வி சார் பல்கலைக் கழகத்தினை உருவாக்கி ஏழை மாணவரக்ளுக்கு இலவசமாக கல்வி கொடுக்கப்போகின்றேன் என ஆரம்பித்து அதன் பிற்பாடு அரசாங்கத்தின் பின்னால் நின்று ஒரு வியாபாரத்தினையும் மற்றும் யாழ்ப்பாணத்தினுடைய காலச்சாரத்தினையும் மறைமுகமாக அழிக்கின்ற ஒரு முகவராக தான் அவர் தற்பொழுது இயங்கிக் கொண்டு இருப்பதை பார்க்கக் கூடியதாக உள்ளது.

 இப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இந்திய உளவுப் படையினருடைய கைக்கூலிகளாக மற்றும் ஒரு சில மேற்கத்தேய நாடுகளின் கைக்கூலிகளாக அங்கே இயங்கிக் கொண்டிருப்பதும் பல நாடுகளுடன் இணைந்து தங்களுடைய உளவு மற்றும் யாழ் இளைஞர்களை அவர்களின் மன நிலைகளை குழப்பி தேசிய ஒருமைப்பாடு மற்றும் அவர்களுடைய தேசியத்தின் மீது இருக்கும் பற்றினை குழப்புக்கின்ற திட்டமிட்ட செயலாக இந்திரன் அவர்கள் இப்பொழுது இயங்கிக் கொண்டிருப்பது அப்பட்டமான உண்மையாக தெரிகின்றது.

 இவரும் யாழ்பாணத்து இளைஞர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் விடுதலை உணர்வினையும் மற்றும் ஒற்றுமைப்பாட்டினையும் மற்றும் இலங்கையின் ஒற்றுமையையும் தமிழ் இளைஞர்களின் தேசிய உணர்வினையும் தமிழ் பற்றினையும் அழிக்கின்ற வகையிலே திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இப்படியே போனால் யாழ்ப்பாணம் நிச்சயமாக இப்பொழுதே தமிழ்நாட்டை விட ஒரு அலங்கோலமான நிலைக்கு மாறிவிடும். இந்தியாவிலே இருக்கின்ற சினிமா பிரபல்யங்களைக் கொண்டுவந்து அவர்களுடைய திசையை மாற்றி அவர்களுடைய வாழ்க்கையை சீரழிக்கின்ற திட்டத்தினை தங்களினுடைய நிகழ்ச்சி நிரலில் செய்துகொண்டிருப்பதாக தெரிகின்றது..

 ஒருபுறம் போதைவஸ்து கஞ்சா ஐஸ் போதைக்கு அடிமையாக இருக்கின்ற இளைஞர்களை காப்பாற்றுவதற்கு யாழிலே பலர் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பல பொதுநலவாதிகள் பல பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பல பொலிஸ் அதிகாரிகள் கூட இந்த போதையை அழிப்பதற்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையிலே இப்படியான இரு சிலர் தங்களுடைய லாபத்திற்காக அலங்கோலமான நிலைக்கு தங்களுடைய இனத்தினை தாங்களே அழிக்கின்ற நிலைக்கு தள்ளியுள்ளனர்.

 இதற்கு கடும் கண்டங்களைக் தெரிவிக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாமல் பொதுநலவாதிகளும் தமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் என லங்கா4 ஊடகம்கேட்டுக் கொண்டு நிற்கின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!