பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்

#Election #people #Pakistan #Election Commission #parties #Vote
Prasu
2 years ago
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்

பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.

தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி பெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

அவர் ஒரு லட்சத்து 71 அயிரத்து 024 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளல் வெற்றி பெற்றுள்ளது. 265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே முடிவுகள் தாமதம் ஆவதற்கு தகவல்தொடர்பு குறைபாடுதான் காரணம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இம்ரான கான் கட்சியின் கோஹர் அலி கான் என்.ஏ.10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். நவாஸ் ஷெரீப் கட்சியின் ஹம்சா ஷெபாஸ் லாகூரில் உள்ள என்.எ.118 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4