லுப்தான்சா ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம்

#Flight #Protest #Airport #Salary #company #Germany #cancelled
Prasu
2 years ago
லுப்தான்சா ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம்

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் 2-வது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.

லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயல்பட்டு வருகின்றன. 

பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

 இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் ஜெர்மனியில் இருந்து சென்னை வரும் விமானங்களும், சென்னையில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4