போதைப் பொருள் இல்லாத காரணத்தினால் தன்னைத்தானே கத்தியால் குத்திய நபர்!

#SriLanka #Police #Crime #drugs #kurunagala
Mayoorikka
1 year ago
போதைப் பொருள் இல்லாத காரணத்தினால் தன்னைத்தானே கத்தியால் குத்திய நபர்!

குருநாகல் பஸ் நிலையத்திற்கு அருகில் தன்னைத்தானே கத்தியால் குத்தி காயப்படுத்திய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குருநாகல் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நபர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தன்வசம் போதைப்பொருள் இல்லாத காரணத்தினால் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை கத்தியால் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 காயமடைந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!