தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தானில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

#Election #government #Pakistan #Security #Forces #Military
Prasu
2 years ago
தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தானில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாகிஸ்தானின் பல மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாநிலங்கள் சிறப்பு வாய்ந்தவை. 

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின்படி, பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கராச்சியில் நடைபெற்ற தேர்தல் பேரணியை குறிவைத்து ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

 தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4